Saturday, 24 March 2012

PFI-AMBULANCE-INAGURATION_LIVE


தமிழகத்தில் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்க இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

 

அவசர உதவிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்படுத்தியிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனம்
கன்னியாகுமர் மாவட்டம் கோட்டார் இடலாக்குடியில் சந்தி தெருவில் இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை நடத்தும் ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்ச்சியை குமரி மாவட்ட தலைவர் ஜுல்பிகர் அலி தலைமை தாங்கி நடத்தி தர இருக்கின்றார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் மற்றும் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

(இந்த நிகழ்ச்சி  இடலாக்குடி  வலைப்பூவில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும், இன்ஷா அல்லாஹ்)